பூமா அன்று காலையிலிருந்து படபடப்பாகவும் எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டுமே என்றும் நினைத்தாள். இருந்தாலும் அப்பப்போ வயற்றில் மீன் துள்ளித்துள்ளி விளையாடியது .(அது என்ன எப்பபாரு பட்டாம் பூச்சி பறக்கிறது..} இன்னிக்கு அகில் பூமாவின் மகன் சுகந்த்கு பெண் பார்க்க போகிறார்கள் .சுகந்தும் அஞ்சனாவும் ஒரு வருஷமா நன்றாக பழக்கம். பொண்ணு பார்க்க என்று சொல்வதற்கு பதில் சம்பந்தி பார்க்க என்று சொல்வது தான் சரி.
பூமாக்கு.தன்னை பெண் பார்க்க வந்த நாள் நல்ல ஞாபகம் வந்தது.பூமா குடும்பம் ஒரு கட்டுப்பட்டியானது. ஜாதகம் பார்பதே சொல்லமாட்டார்கள் . எல்லாம் ஒரு மௌன நாடகமாகவே இருக்கும் ..இவளும் அதை மனதுக்குள் ரசிப்பாள். திடீரென்று மாப்பிளை வருவதாக அன்று காலை தான் சொன்னார்கள். .என்ன படிப்பு, வேலை, ஒரு போட்டோ மூச் எதுவும் சொல்லவில்லை. அகில் , வந்தவுடன் ஒரு பேப்பர் ஐ வைத்து முகத்தை மூடியவர்தான் ,ஏதோ அதிலிருத்து தான் கேள்வி கேட்க போகிற மாதரி மூழ்கி விட்டார் .ஏதோ தம்பியும் அம்மாவும் பார்க்க நல்ல இருந்ததால் மனதில் பாரத்தை போட்டு பூமா சரி என்று சொன்னாள். ஆனால் அகில் உண்மையிலே ரொம்ப நல்ல மாதிரி. பேப்பர் விஷயத்தை கவனித்தது தனி கதை.
பூமா, அகில், சுகந்த் மூவரும் சரியான டைம்க்கு கிளம்பி அஞ்சனா வீடு போனார்கள் . என்ன அதிசியம் ! அஞ்சனா தான் எல்லோரையும் உபசரித்து அமர செய்தாள், இரு குடும்பங்களயும் அஞ்சனாவும், சுகந்தும் அறிமுகம் செய்து விட்டு இரண்டு பேரும் வாசலுக்கு போய்விட்டார்கள். இவர்களும். ஒரு மாதிரி ஆரம்ப கூச்சம் எல்லாம் போக சகஜமாக பேசி ,கல்யாணம் பற்றி ஒரு நல்ல முடிவுக்கு வந்தார்கள். இது தான் இன்றைய நடை முறை! . இதை புரிந்து கொண்டு நடந்தால் இந்த தலை முறையோடு பெற்றவர்களுக்கு நல்ல உறவு பாலம் அமையும் .
சொல்லுவதை நடைமுரபடுத்தாத இந்தகாலத்தில் நடைமுறை படுத்தி, சொல்பவர்கள் மிக குறைவு . இ அம ப்ரௌட் ஒப் யு அம்மா ( and also appa):) !!
பதிலளிநீக்கு