புதன், 21 செப்டம்பர், 2011

இன்டெர்(நொந்து) பிசினஸ் !!!



வேலையிலுருந்து ஓய்வு பெற்றாகிவிட்டது. வீட்டில் சும்மா எப்படி பொழுதைக்  கழிக்க முடியும் ? இருக்கவே  இருக்கு கணினி!! நண்பன் இன்டர்நெட்டில் நிறைய சம்பாதிக்கலாம் என்று உசுப்பேத்த காணாததை கண்ட மாதிரி அந்த வலையில் டமார்!! ஒன்றுமில்லை விழுந்த சத்தம்!!. 

அவ்வளவுதான் அன்றையலிருந்து நானும் laptop ம் புது கணவன் மனைவி போல் பிரிக்க முடியாமல் ஆகினோம். லேப்டாப்ய் மடி மீது வைத்துகொண்டு என்னவோ office வேலை மும்மரமாக  செய்கிற மாதரி முகத்தை வைத்து கொள்வேன். என் மனைவிக்கு கணினி பற்றி ஒன்று தெரியாதது எனக்கு வசதி ஆகிவிட்டது.சே! நம்ப ஆளுக்குதான் எவ்வளவு பொறுப்பு என்று பெருமைப்பட,. வேளா வேளைக்கு கல்யாண பரிசு தங்கவேலு style இல்  காபி டிபன் எல்லாம் சரியான நேரத்திற்கு வரும.  நூற்றுக்கு 80 விழுக்காடு  home பிசினஸ் எல்லாமே பணம் முழுங்கும் கவர்ச்சி கன்னிகள் தான் என்பது புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புதைக்குழியில் இழுக்கப் பட்டேன்.அவர்களுடைய business ஐ பற்றி விலாவாரியாக ரொம்பவும் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். சில பொய்யான நபர்களின் போட்டோகளும், அவர்களின் வாக்குமூலம் இதில் இடம் பெற்றிருக்கும். அதை படித்து உடனே அதில் இறங்கினால் அப்புறம், "அடடா வடை போச்சே!" கதை தான். 

ம். இப்படிதான் நானும் ரொம்ப ஆசை பெருகி ஒரு சைட் இல் போயி free registration தானே என்று நினத்து எல்லா விவரங்களையும் தந்த பிறகு ,  ரொம்ப குஷியாக இருந்தேன். ஆனால்  வந்ததே ஒரு bouncer .. என்னவென்றால், மேலும் பணம் செலுத்தி upgrade செய்தால் தான் அடுத்தக் கட்டத்திற்கு போகமுடியும் என்ற நிலை. சரி, இந்தஒரு  முறை மட்டும் செலுத்தலாம் என் நினத்து ரகசியமாக (பொண்டாடிக்கு  தெரியாமல்) credit card விவரங்களை செலுத்தினேன். அவ்வளவுதான் , என்ன ஆச்சர்யம் ! ஒரு சூப்பரான website உடனே வந்தது. ரொம்ப பெருமையாக என் மனைவியிடம் காண்பித்தேன். ஏன் என்றால் ஒரே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியும் என்பதை விளக்கி (விளங்காத) ஒரு அட்டவணை!! ஆனால் , அவள் பார்த்த பார்வை இதெல்லாம் புரிந்தால் நாம எங்கேயோ போயிருப்போமே என்கிற மாதிரி மனதை உறுத்தியது. இருந்தாலும் ஆண் வர்கமாயிற்றே !! அவளை  அடக்கினேன். ஆனது ஆகட்டும் என்று வேலையை ஆரம்பித்தேன். அடுத்த கட்டமாக ,இன்னும் 10 ஆட்களை இதில் சேர்க்கச் சொல்லி ஒரு நிபந்தனை! ஒருத்தர் இரண்டு ஏமாளி வேண்டுமானால் கிடைப்பார்கள் இவ்வளவிற்கு எங்கேப் போக?  இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என நினைத்தேன். சரி நமக்கு இந்த பிசினஸ் லாயக்கு இல்லை,என்று  வேறு siteக்கு போனால்  மீண்டும் இதே கதை தான். தப்பி தவறிக் கூட பணம் கையில் கிடைத்து விடக் கூடாது என்பதிலே எல்லா site ம் குறியாக இருப்பது புரிந்தது. இது புரியாமல் மனைவியோ யார் என்னை பற்றி கேட்டாலும் பெருமையாக இன்டர்நெட் பிசினஸ்இல் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்று சொல்வாள். எனக்குதான் தெரியும் நான் என்ன கிழிக்கிறேன் என்று!! ரொம்ப வெறுப்கிவிட்டது.. 

 சும்மா விவரம் கெட்ட தனமா இன்டர்நெட்டில் பிசினஸ் செய்கிறேன் என்று ஜம்பம் செய்யாமல் உருப்படியான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்  என்ற புத்தி வந்தது.

 "எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வரவேண்டும் ...' என்ற L. R. ஈஸ்வரி அவர்களின் பாடலை சற்று மாற்றி '' எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கு வரவேண்டாம் ."  என உங்களை எச்சரிக்கிறேன்  !!