தீபாவும் ,சுனிலும் ரொம்ப நேரம் அமைதியா அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார்கள் .ஒரு வருஷத்துக்குள் இந்த கல்யாணம் முடிவுக்கு வரும் என்று இரண்டு பேரும் எதிர்பார்கவில்லை .இரண்டு பெற்றோர்ரிடமும் எப்படி எல்லாம் வாதாடினார்கள் .எல்லாம் பொய்யா? பின்பு இன்று ஏன் இந்த நிலைமை .ஒன்றும் புரியவில்லை . இது லிருந்து எப்படி வெளி வருவது என்று யோசித்தார்கள் . இந்த சூழ்நிலை ஏன் வந்தது, யார் காரணம் ,என்று இருவருக்கும் புரியவில்லை . இதை இருவருமே விரும்பவும் இல்லை . பிரச்சனயில் இருபவர்களுக்கு சில சமயம் அதில் இருந்து வெளி வந்து தீர்வு காண்பது அரிது .அதனால், .இருவரும் ஒரு முடிவுக்கு வந்து மாலா ஆன்டி யை பார்க்கச் சென்றார்கள் .
மாலா aunty இடம் எதையும் பகிர்ந்து கொள்ளலாம். . மாலா இரண்டு பேருக்கும் ரொம்ப friend .மாலா எப்போ கேட்டாலும் கல்யாணம் ஒரு சுகமான பயணம் என்பாள்.அவள் பேச்சில் எப்போதும் அவளுக்கும் கணவனுக்கும் உள்ள அன்னோனியம் தெரியும் .
“அடடா !என்ன அதிசயம்! காற்று இந்த பக்கமாக அடிக்கிறது .இன்று வேற எங்கும் போகலையா?” என்று மாலா கேட்க, இருவரும் ஒரு கோடு போல் புன்னகைத்தார்கள் . வழக்கமான கலகலப்பு இல்லாததால் ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டு வழக்கம் போல் உபசரித்தாள் . ஆன்டி உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?’ ‘லாமே ‘, முதலில் இருவரும் கொஞ்சம் சாப்பிடுங்கள்’ என்றாள். நேரம் கிடைக்கும் போது இங்கு வந்து எல்லா விஷயமும் ஷேர் பண்ணிக் கொள்வது இவர்கள் வழக்கம் . மாலா அவர்கள் பேச்சில் குறிக்கிடாமல் பொறுமையாக எல்லா வற்றியும் கேட்டாள்.
தீபா , ‘ இந்த ஒரு வருஷத்தில் நாங்க சந்தோஷமா இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணலாம். இப்படி போனால் கொஞ்ச நாளில் ஒருத்தர், ஒருத்தர் வெறுத்துடுவோமோ என்று பயமாக இருக்கு .
அதான்!! இந்த முடிவு ! ‘.மாலா, 'உங்களுக்கு கல்யாணத்தின் அர்த்தமோ,மதிப்போ என்ன என்று தெரியலை .எதோ இன்னிக்கு இந்த ட்ரைனை மிஸ் பணிட்டோம், நாளை வேற வராமலா போய் விடும் என்ற எண்ணம் ,இல்லையா ?'. வீடு நல்லா இருக்கணும் என்று நினைக்கிற நீங்கள் அதன் அஸ்திவாரத்தைப் பற்றி கவலை படுவதில்லை .நான் உங்களுக்கு புத்திமதி சொல்றத வீடநீங்களாக அதை உணர்வது தான் சரி .இப்போதிக்கு இந்த முடிவை ஒரு மாதம் தள்ளிப் போடுங்கள் .ஒரே வீட்டில் தனித்தனியாக அவரவர் வேலை யை ப் பாருங்கள் .அதற்கு பிறகு பார்க்கலாம்’ என்றாள் .
மாலா சொன்னமாதரி கொஞ்சநாள் போனது . .தீபா, சுனில் இரண்டு பேரும் வளர்ந்த விதம் வேறு வேறு . குணத்திலும் , ,நிறைய வித்தியாசம் உண்டு .சுனில் எல்லாம் பிளான் பண்ணி ,டைம் படி நடப்பான் .தீபா எல்லாம் கடைசி நிமிஷம் தான் ,ஆனால் முடித்து விடுவாள் .சுனில்க்கு .சமையல் பற்றி ஒன்றும் தெரியாது , காபி கூடபோட தெரியாது. சில ஆண்கள் விதி விலக்காக இருக்கலாம் .தீபா மாதரி சில பெண்கள் இதை உதாரணமாக கொண்டு எதிர்பார்ப்பதால் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது . ,சுனிலுக்கு குளித்தவுடன் ஈர டவலை அப்படியே பெட் மேல் போடும் பழக்கம் உண்டு ..எழுந்தவுடன் தீப கண்ணில் அது படும் , உடனே அன்றைய சண்டை ஆரம்பம் ஆகும் .பூண்டு இல்லாமல் இவளுக்கு சமைக்க வராது. சுனில் அதன் வாசனைக்கே காதா தூரம் ஓடுபவன் தீபா,.,சே காதலிக்கும் போது எவளோ முறை அம்மா விடம்சொல்லி அவனுக்கு பிடித்ததை செய்து கொடுத்து இருக்கேன் .இப்போ ஏன் முடியாம போச்சு? அவன்என்னோட பேங்க் வேலை முதல் எல்லா வெளி வேலை யும் பார்த்தது ரொம்ப சௌரியமாகஇருந்தது .நான் தான்கொஞ்சம் அவசரப் பட்டனோ? இந்த வாரம் ஆபீஸ் லேட்டாக போனது , பேங்க் இல் பைன் கட்டினது எல்லாம் நியாபகம் வந்தது . சுசுனில்க்கும் அதே நிலமைதான் .அவளால் சீக்கிரம் எழும் பழக்கம் இல்லை என்று தெரிந்தும் ,காபி கொடுப்பதில்லை என்று ஏன் கோபப்பட்டேன் .முன்னாடி அவள் சொல்லாமலே வெளி வேலை , பேங்க் வேலை எல்லாம் பார்த்தவன் இப்போ ஏன் முடியவில்லை? .தானும் ஏன் அனுசரிச்சு போகவில்லை ? சராசரி கணவனாக ஏன் நடந்து கொண்டோம் என்று யோசிக்க ஆரம்பித்தான். காதலிக்கும் போது அவரவர் குணங்களை அப்படியேய் ஏற்று கொண்ட மனது கல்யாணம் என்ற வட்டத்துக்குள் வந்தவுடன் ஏன் தடுமாறுகிறது ? எங்கு தவறு என்று இருவருக்கும் புரிய ஆரம்பித்தது .நான் ஏன் பண்ணனும் ,நீ ஏன் பண்ண கூடாது,என்று தர்க்கம் பண்ணாமல் உனக்காக, நமக்காக என்ற அன்பு தான் அஸ்திவாரம் என்று புரிந்தது . பேங்க் இல் கொஞ்சம் கொஞ்சம் மாக சேரும் பணம் வேண்டுமானால் மகிழ்சிச்சியைத் தரும்,.ஆனால் மனம் என்ற பேங்க் இல் சேர்த்து வைக்கும் தேவை இல்லாத நினைவுகள் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிவிடும். இதை உணர்ந்த தீபாவும் ,சுனில் லும் ஸ்வீட்ஸ் உடன் மாலாவை பார்க்க கிளம்பினார்கள்.