ஆனால் இதே வார்த்தை சமீப காலமாக மீண்டும் வழக்கத்திற்கு வந்துள்ளது. காரணம் தான் வேறு. 50 வயதிற்கு மேல் காலத்தின் கட்டாயத்தால் தனித்து விடப்பட்ட ஆண் , பெண் இதனை பின்பற்றலாமா என்று யோசிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு விதத்தில் அதில் தவறு இல்லை. மீதி நாட்களை தனிமையில் கழிப்பதற்கு பதில் தன் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்துக் கொள்ளவும் தனிமையை போக்கவும் நட்பு என்ற முறையில் துணைக் கிடைத்தால் ஆரோக்கியமானது தானே!! ஒரே கூரையின் கீழ் துணையுடன் அவரவர் விருப்பப் படி வாழ்வது மன அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். அந்த வயதில் நிறைய பக்குவம் அடைந்திருப்பதால் துணையை தேர்வு செய்வதில் குழப்பமும் அதிகம் இருக்காது.
ஒருவருக்கொருவர் கமிட்மென்ட் இல்லாத இத் தகைய வாழ்க்கை இந்த வயதில் சரிவரும் என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் முதியோர் இல்லங்களுக்கு போகத் தயங்கும் சிலருக்கு இது ஒரு வரப் பிரசாதமாக கூட அமையலாம். மற்ற ஆசாபாசங்களுக்கு இடம் இன்றி நட்பு சார்ந்த ஒரு வாழ்க்கை அமையும் என்றால் அது வரவேற்க பட வேண்டிய ஒன்று. அதையும் தாண்டி செல்வது அவரவர் தனிப் பட்ட விருப்பம். மக்கள் மனோபாவம் மாறிக் கொண்டு வருகிறது .இதற்கு சில நாட்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியை ஒரு உதாரணமாக கூறலாம். ஒரு தனிப் பட்ட அமைப்பு 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு living patner தேர்வு செய்துக் கொள்ள ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் .அதற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அமைப்பார்களே ஆச்சிரியப்பட்டுப் போனார்கள் .எதற்கும் ஒரு தொடக்கம் அவசியம்; அது நல்லதாக இருக்கும் பட்ச்சத்தில் ஊக்குவிப்பதில் தவறு இல்லை அல்லவா?