சச்சினா!! சதமா!!
இன்று கொலைவெறி பாடலுக்கு அடுத்த படியாகஅதிகமாக பேசப்படும் விஷயம் சச்சின் சதம் அடிப்பாரா மாட்டாரா! என்ற கேள்விதான். ஐயோ! போதுமடா சாமி! ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாறி மாறி போட்டுத் தாக்குவது; கண்டிப்பாக நூறாவது சதம் என்பது சச்சினுக்கு இன்னொரு மையில்கல் என்பதில் ஒரு துளி ஐயமும் இல்லை. எதிர்பார்ப்பு கூடக் கூட அதுவே அவரை பலவீனப் படுத்திவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. என்னதான் அனுபவப்பட்ட வீரராக இருந்தாலும் அவரும் மனிதர்தானே! இத்தனை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது , அவருக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தாமலா போகும்? எல்லோருக்கும் தேவை பொறுமை. அவருக்கும் அந்த சாதனையை செய்யும் துடிப்பு அதிகமாகத்தான் இருக்கும்
.
ஒவ்வொரு தொடரின் பொது இதையே பிராதனமாக கொண்டு பேசப் படுவது தேவை இல்லாத ஒன்று. இப்பொழுது ஆஸ்திரேலியா தொடரை மேலும் சொதப்பாமல், விழித்துக் கொள்ளும்படியான உண்மையான விமர்சனங்கள் தான் நம்மவர்களுக்கு தேவை. நன்றாக ஆடும் போது ஒரேடியாக பாராட்டுவதும் சரியாக விளையாடவில்லை என்றால் அப்படியே கீழே போடுவதுமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சச்சின் சதம் அடித்தால் ஒரு அரசாங்கம் அவருக்கு(அரசவையில்அறிவிப்பது போல்) நூறு தங்க காசுகள் பரிசாக கொடுக்கப் படும் என்பதுதான். நல்ல வேளை அந்த முறை அவர் அடிக்கவில்லை; இல்லை என்றால் காசுக்காகத்தான் அடித்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள். சச்சினுக்கு இன்னமும் கிரிக்கெட்டின் மீதான passion, மதிப்பு குறையாததால் தான் அவரால் சாதனை படைக்க முடிகிறது. இம்மாதிரி அறிவிப்பின் மூலம் அவரது திறமையை சிறுமை படுத்தல் கூடாது. இனியும் ,உலகிற்கு அவர் திறமையை உணரவைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. நம்மை விட அவருக்கு தான் சாதனையை படைக்க இன்னும் அதிக வேகமும் ஆவலும் இருக்கு என்பதை உணர வேண்டும். காலம் கொஞ்சம் ஆனாலும் கூடிய சீக்கிரமே அந்த மையில் கல்லை அடைய வாழ்த்துவோம்.