ஒரு நாளைக்கு இருக்கும் நேரத்திற்கு ஏற்ப வேலைகளை அமைத்துக் கொள்ளும் என் போன்றோருக்கு கூடுதலாக 2 மணிநேரம் கிடைத்தால் விட்டுப் போன சில விஷயங்களை யோசிக்கலாம்; என் சிந்தனைக் கொஞ்சம் பின்னோக்கித் தான் சென்றது . உடைகளில் உள்ளக் கரைகளை surf excel கொண்டு நீக்கி விடலாம்; ஆனால் மனம் என்ற உடையில் ஏற்படும் காயம், வடு போன்ற கரைகளை இந்த மாதிரி அழிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த போது நம்முடைய அணுகுமுறையால் சாத்தியமே என்றுதான் தோன்றுகிறது.
நம்மால் யாரேனும் காயப் பட்டிருந்தால் அதைப் போக்குவதற்கான முதல் முயற்சியை எடுக்க வேண்டும். தொடர்பு சாதனங்கள் பெருகி உள்ள இந்தக் காலக் கட்டத்தில் யாரையும் சுலபமாகதேடி அணுக முடியும். அதன் மூலம் சம்பந்த பட்டவரை அணுகி நம் தவறை உணர்ந்து எண்ணங்களை பரிமாறிக் கொண்டு பேச்சு வார்த்தை மூலம் அவர்களுக்கு நம்மால் ஏற்பட்ட காயம் என்றக் கரையை போக்க முயற்சி செய்யலாம்.
அது போல் நமக்கு யாரிடமாவது பிணக்கோ, வருத்தமோ இருந்தாலும் "இன்ன செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் "என்ற குறளுக்கு ஏற்ப நடக்க முயலலாம். நாமே முன்வந்து அவர்களிடம் நேசத்தை வளர்த்து அவர்களுக்கு தேவையானதை செய்யத் தொடங்கினால் மனதில் ஏற்பட்ட காயம் என்ற கரை கொஞ்சம் கொஞ்சமாக மறைய வாய்ப்பு உண்டு! கிடைக்கும் அதிகமான 2 மணி நேரத்தில் இத் தகைய முயற்சியில் இறங்கினால் மனம் லேசாவதுடன் அன்பையும் நடப்பையும் வளர்க்க முடியும்.
இது வெறும் பேச்சுக்காக சொல்லப் படும் விஷயம் அல்ல;உண்மையிலேயே மனதை தூய்மை ஆக்கும் ஒரு உன்னதமான செயல். காலம் போய்க் கொண்டிருக்கும் வேகத்தில் மனிதபிமானத்துடன் செய்ய வேண்டிய விஷயத்திற்கு கூட இப்படி அதிகமாக 2 மணி நேரம் கிடைக்கும் போது தான் யோசிக்கத் தோன்றுகிறது!! இதற்கு யாரைக் குறை சொல்வது?