சில நிகழ்வுகளும் சம்பவங்களும் திரைப் படங்களிலும் , கதைகளிலுமே சாத்தியம். உதாரணமாக சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் ஒரே பாடலிலோ அல்லது 4,5 காட்சிகளிலோ கோடீஸ்வரக ஆவதை பார்த்திருக்கிறோம். அது மாதிரி நடைமுறை வாழ்க்கையில் சாத்தியம் என்பதைக் KBC என்ற நிகழ்ச்சி நிருபித்துள்ளது. மாதம் 6000 சம்பளத்தில் இருந்த சுஷில் குமார் 13 கேள்ளிவிகளுக்கு பதில் அளித்ததின் மூலம் இன்று 5 கோடிக்கு அதிபதி ஆகிவிட்டார். இது அவர் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
வெற்றிப் பெற்றபின் அவர் முகத்தில் தெரிந்த அதிர்சிக் கலந்த சந்தோஷமும் அதை தன் மனைவியுடன் சுற்று சுழலை மறந்து பகிர்ந்துக் கொண்ட விதமும் உண்மையிலேயே மனதை நெகிழச் செய்தது. ஒரு சாதாரண மனிதனை இந்த நிலைக்கு உயர்த்திய அந்த நிகழ்சியை பாராட்டத்தான் வேண்டும். இது அதிஷ்ட்டத்தை நம்பி இல்லாமல் அறிவுபூர்வமாக நடத்தப் படும் நிகழ்ச்சி ஆகும். இதற்கு நிறைய புத்தகங்கள் மூலமாகவும், மற்ற ஊடகங்கள் வாயிலாகவும் தகவல்கள் சேகரித்து தயார் படுத்திக் கொண்டால் தான் அந்த இருக்கையில் அமர முடியும்; நிறைய உழைப்பும், விடா முயற்சியும் தேவை. எல்லாம் இருந்தும் இந்த நாற்காலியில் அமர்ந்து, நினைவில் வைத்துக் கொண்டு பதில் கூறுவது சாதாரண விஷயமில்லை. ஒரு சிறு கிராமத்திலுருந்து அதிகம் வெளிஉலகை அறியாதவர் சாதித்திருப்பது உண்மையிலேயை பெருமை பட வேண்டிய விஷயம்.இதையேமுன் உதாரணமாகக் கொண்டு நாளை நிறைய சுஷில் குமார் உருவாக வாய்ப்புண்டு. இவர்களுக்கு பணத்தின் தேவையும், மதிப்பும் உணருவதால் சாதிக்கும் உத்வேகமும் அதிகம்.
இதே நிகழ்ச்சியில் பலமான பொருளாதாரமும் கல்விப் பின்னணியும் கொண்ட பெண்மணி பொழுது போக்காக கலந்துக் கொண்டு ஒரு சாதாரணக் கேள்விக்கு பதில் தெரியாமல் 50 லட்சத்தை இழந்த போது அவருக்கும் சரி நமக்கும் பெரிய வருத்தம் ஒன்றும் ஏற்படவில்லை .ஆனால் இந்த சாதாரண மனிதனுக்கு கிடைத்த தொகை எல்லோரையுமே மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது என்றால் மிகையாகாது .இம்மாதிரி நிகழ்ச்சி ஒருவரது வாழ்க்கைக்கே திருப்பு முனையாக இருக்குமே ஆனால் அதை வரவேற்பதில் தவறு ஒன்றும் இல்லை.
நிற்க. TRP rating மனதில் கொண்டு இது ஒரு set up நிகழ்ச்சியாக இருக்காது என்று நம்புவோமாக!!!