நித்யாவின் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் அவளின் பெற்றோருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரே பெண்; மத்தியதர குடும்பம்; நீங்கள் நினைத்த மாதரியே வெளி நாட்டு மாப்பிளை தான். கிடைத்த 20 நாள் லீவில் வந்து திருமணத்தை முடித்துக் கொண்டு, இரண்டு நாளில் கிளம்பி விட்டான்.நித்தியா கொஞ்ச நாள் புகுந்த வீட்டில் இருந்து விட்டு தனியாக அடுத்த மாதம் கிளம்ப வேண்டும்; அப்பறம் எப்போ வர முடியுமோ? அதான் இந்த ஏற்பாடு.
நித்யா வளர்ந்து படித்து எல்லாம் தஞ்சாவூரில் தான். நகரில் வசிக்கும் பெண்களிடம் காணும் fashion, style எல்லாம் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் ரொம்பவும் தைரியமான பெண். நித்யாவின் கணவன் சந்துருவெளி நாட்டில் இருந்தாலும், தன் மனைவி ரொம்ப படித்து வேலைக்கு போக வேண்டும் என்று விருப்பப் படவில்லை. city இல் வளர்ந்த பெண்கள் அதற்கு ஒத்து வருவது கொஞ்சம் கஷ்டம் என்று தெரிந்து city கு வெளியில் படித்த பெண் தான் தனக்கு ஒத்து போக முடியும் என்று முடிவு செய்தான். அவனைப் பொறுத்த வரை சில விஷயங்கள் ஆண்களும், சிலது பெண்களுக்குமே உரித்தது; அதை அவரவர்கள் செய்தால் தான் அழகு, அர்த்தமும் உண்டு என்று நினைப்பவன். ஏன் சில ஆண்கள் பரத நாட்டியம் நன்றாக ஆடினாலும், அதை விரும்ப மாட்டான் ; அந்த நடனதிற்கே உண்டான நளினமும், அழகும் பெண்களுக்குத் தான் பொருந்தும் என்பான்.
அன்று வீடே அமக்களப் பட்டது. நித்தியா ஊருக்கு கிளம்பும் நாள். முதல் முதலாக விமானப் பயணம்; அவரவர்களுக்கு தோன்றிய அறிவுரைகளை, காசாப் பணமா, வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். சந்துரு வேறு exam எழுதுவது போல் 2 பக்கத்திற்கு எல்லா formalities ம் விளக்கமாக எழுதிக் கொடுத்திருந்தான். அம்மாவும் புரியாமல் கவலையோடு அடிக்கடி ,மாப்பிள்ளைக் கொடுத்ததை ஒழுங்கா படித்துக் கொள் என்று புலம்ப எல்லோரின் அக்கறையும் பாசமும் புரிந்து மௌனமாகக் கேட்டுக் கொண்டாள். அவளை விமான நிலையம் வரை வழி அனுப்ப இரண்டு குடும்பமும் கிளம்பியது.
நித்தியா என்னத்தான் தைரியமாக இருந்தாலும், முதல் பயணம் நினைத்து உள்ளுக்குள் உதறத் தான் செய்தது. உள்ளேச் செல்ல விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் அவளிடம் பிரியாணிவடை(பிரியா விடை) பெற்றுக் கொண்டிருந்தனர் .பெற்றோரைப் பார்க்கப் பார்க்க நித்யாவிற்கு பிரிவின் ஆழம் நெஞ்சை அடைத்தது. நேரம் போவதை உணர்ந்து எல்லா சாமான்களையும் சரிப் பார்த்து checkin counter ஐ நோக்கி செல்லத் தொடங்கினாள். இனிமேல் உதவிக்கு யாரையும் எதிர் பார்க்க முடியாது. எல்லா luggage ஐ trolly மேல் வைத்து வரிசையில் போய் நின்றாள். வரிசையில் நகர்ந்த படியே தோளில் bag ஐ சரி செய்து passport மற்ற இத்யாதிகளையும் தயாராக வைத்துக் கொண்டாள்.
சுற்றிப் பார்க்கும் போது தான் தெரிந்தது, எத்தனை விதமான மக்கள்; ஒவ்வொருவர் முகங்களிலும் விதவிதமான உணர்சிகள். ஒரு புறம் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் நித்யாவிற்கு தோன்றியது. ஒரு வேளை தன் முகத்தில் முதல் பயணம் என்று எழுதி இருக்கோ என்றுக் கூட நினைத்தாள்.ஐயோ! இந்த formalities எல்லாம் எப்படா முடியும் என்று இருந்தது முன்னால் இருப்பவர்கள் செய்வதை கவனித்துக் கொண்டு அதுபடியே தானும் செய்தாள். நடுவில் ஒருவர் தன்னுடைய சிறிய bag ஐ சேர்த்து cheak in பண்ண சொன்னதை நாசுக்காக ஒதுக்கினாள். ஒரு வழியாக எல்லாம் முடிந்து borading pass ஐ வாங்கிக் கொண்டு அடுத்த immigration கு நகர்ந்தாள். திடீரென்று நியாபகம் வந்து hand baggage கு உண்டான tag ஐ மீண்டும் counter இல் வந்து பெற்றுக் கொண்டாள்.
immigration முடிந்து அப்பாடி என்று ஒரு chair இல் அமர்ந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் flight உள்ளே அனுப்புவார்கள்.அதற்குள் restroom போக நினைத்தாள். இப்பவும் பாட்டி சிறு வயதில் சொன்னது நியாபகம் வந்தால் சிரிப்பை அடக்க முடியாது; "ஏய், plane போகும் போது வாயை திறந்துக் கொண்டு பார்க்காதே; யாராவது பாத்ரூம் போன உன் வாயில் தான் விழும்"என்பாள். மனதிற்குள் சிரித்துக் கொண்டே, luggage உடன் restroom பொய் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு boardingpass உடன் உள்ளேச் செல்லத் தயாரானாள்.
ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து hand baggage தலைக்கு மேல் உள்ள box இல் வைத்து விட்டு அமர்ந்தாள். பதட்டத்தில் இத்தனை நேரம் காணமல் போன பசி இதோ இருக்கேன் என்று சத்தம் போட ஆரம்பித்தது. பாதுகாப்பு விதி முறைகளைக் கேட்கக் கூட மனம் மறுத்தது. எப்போடா உணவு தருவார்கள் என்று ஏங்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அலங்காரமாக உணவுத் தட்டு நித்யா முன் வைக்கப் பட்டது. பழக்கம் இல்லாத உப்புச்சப்பில்லாத உணவால் பசி பன்மடங்கு ஆனது தான் மிச்சம்; சமாளித்து ஒரு மாதிரி தூங்கத் தொடங்கினாள்.
தீடிரென்று யாரோ உலுக்கியது போல் பதற்றத்தில் விழித்தாள்.வானிலைக் கோளாறினால் விமானம் தாறுமாறாகப் பறப்பதை அறிவித்துக் கொண்டிருன்தனர். பிடிமானமே இல்லாமல் அந்தரத்தில் சுழல்வது போல் ஒரு
மரண பயம் நித்யாவிற்கு ஏற்பட்டது. ஐயோ முதல் பயணமே கடைசி ஆகி விடுமோ என்று அஞ்சினாள். எல்லா வித அனுபவமும் ஏன் முதல் பயணத்திலே ஏற்பட வேண்டும் என்று நினைத்து நொந்தாள்.கண்ணை மூடி ப்ராத்தனை செய்யத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் விமானம் சாதரணமாகப்
பறக்கத் தொடங்கியது. எப்போத் தூங்கிநாளோ விமானம் தரை இறங்குவதை உணர்ந்தாள். மீண்டும் வெளி வந்து immigration, customs எல்லாம் முடித்துக் களைத்து வெளியே வந்தாள். ஆவலாய் புன்னகையுடன் காத்திருக்கும் கணவனைக் கண்டவுடன், பதட்டம் எல்லாம் ஆதவன் கண்டப் பனிப் போல் காணாமல் போனது; சந்தோஷமாக கணவனின் கைக்குள் அடைக்கலம் ஆனாள்.