இன்று இந்தியாவின் ஜனத் தொகை எவ்வளவு பெருகி இருக்கிறதோ அதே அளவு வாகனங்களும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இன்று ஒருவரின் வாழ்க்கைத் தரம் அவர்களிடம் உள்ள வாகனங்களின் அடிப்படையில் பார்க்கப் படுவதென்றால் மிகையாகது. உலகச் சந்தையில் வேண்டுமானால், எரிப்பொருளின் விலையில் ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஆனால் வளரும் நாடான நம் இந்தியாவில் எந்த அத்யாவசப் பொருட்களின் விலையிலும் எரிபொருள் விலை உட்பட, இறக்கத்தைக் காண்பது என்பது அரிது.
பெட்ரோல் விலையைக் குறைப்பது என்பது நம் கையில் இல்லை. ஆனால்அதை எப்படி சிக்கனமாகப் பயன் படுத்தி, சேமிப்பை அதிகரிப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. சில வழி முறைகளைக் கடைப் பிடித்தால், சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது; போக்குவரத்து நெரிசலையும் குறைக்க வாய்ப்பு உண்டு. விலை ஏற்றத்தை நினைத்து ஒரு புறம் புலம்புவதோடு நிற்காமல், அது நம் வாழ்க்கையை அதிகம் பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. மக்களுக்கு பயன் படும் பொது வாகனக்களைத் தவிர்த்து, முதலில் அவரவர் வீடுகளில் இருந்து இதற்கான முயற்சியை தொடங்க முன் வர வேண்டும்.
இதில் பெரும் பங்கு நடு மேல்தட்டு, மேல்தட்டுமக்கள், மிகவும் பணக்காரர்கள் இவர்கள் அணுகுமுறையில் தான் இருக்கிறது .
1. இம்மாதிரி வீடுகளில் பொதுவாக அவரவர் சௌகரியத்திற்கு, வசதி இருப்பதால், தனித் தனிக் கார்கள் வைத்திருப்பார்கள். இதைத் தவிர்த்து ஒரு வாகனம் இருந்தால் எரி செலவு குறைய வாய்ப்பு உண்டு; திருமணம், பொது நிகழ்ச்சி ,விழா போன்றவற்கு குடும்பத்துடன் ஒன்றாக செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நேர விரயத்தையும் தவிர்க்க முடியும்.
2. இரு சக்கர வாகனம் அதிகம் புழக்கத்தில் உள்ளது. நடை பழகும் முறையே மக்கள் அடியோடு மறந்து விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எரிபொருள் இன்றி இயங்கும் சைக்கிள், என்பதின் அருமையை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்து கொண்டு, உபயோகிக்கத் தொடங்க வேண்டும். அதனால், உடல் நலத்திற்கு நல்லது மட்டுமல்லாமல், சுற்றுப்புற சூழலுக்கும், கேடு விளையாது.
3. இன்று பல மென் பொருள் நிறுவங்களும், கால்சென்டர்களும், தங்களிடம் பணிப்புரிபவர்களை ,pick up, drop செய்ய நிறைய வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்; இதற்காக அதிக ஓட்டுனர் அமர்த்தல், எரிப்பொருள் செலவு,கால விரயம், மற்ற பிரச்சனை வரும் பொது ஆகும் செலவு எல்லாவற்றையும் பார்க்கும் போது இது தேவையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஆகும் செலவை, அந்தந்த அலுவலகம், அருகிலேயே 5 கி.மி. தொலைவில் வீடு வசதி அமைத்துக் கொடுத்தால், மேற் கூறியப் பிரச்னையை சமாளித்து, போக்கு வரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உண்டு.
4. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பெட்ரோல்,டிசல் அல்லாத, சுற்று சூழலையும் பாதிக்கா வண்ணம், வாகனங்கள் செயல்படவேண்டும். உதரணமாக சூரிய சக்தி, battery கொண்டு இயங்கும் வாகனங்கள் உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கு உண்டான ஆய்வை தீவிர படுத்த வேண்டும். இதனை தனியார் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து செயல் படுத்த வேண்டும்.