அழகான வீட்டின் முன்னாடி இருக்கும் சிறிய தோட்டத்தில் இருந்து பூக்களின் மணம் கலந்த சுகமான காற்று வேதாவின் நாசியைத் தீண்டியது.காலை பரப்பரப்பு ஓய்ந்த இந்த அமைதி, பழக்கம் என்றாலும்,இன்று வேதா மனதில் ஒரு சலிப்பும் வெறுமையும் சூழ்ந்தது.வேதாவின் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் இது நியாயம் என்று தான் தோன்றும்.
வேதா பயந்த சுபாவம் உள்ளப் பெண்.பிறந்த வீட்டில் சுதந்திரம் இல்லாமல், ரொம்பக் கண்டிப்புடன் வளர்ந்தவள்.டிகிரி முடிக்கும் முன்பே 19வயதிலையே அரவிந்த் உடன் திருமணம்.திருமணத்திற்குப் பிறகாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைத்ததில் விழுந்தது மண். அரவிந்த் பார்க்க நன்றாக இருப்பான்; பெரியப் படிப்பு , நல்ல வேலையும் கூட.ஆனால் ரொம்ப முன்கோபம்,அகம்பாவம்,ஆண் என்ற மமதை இதல்லாம் எப்போதும் அவனுடன் இருப்பவை.
திருமணம் ஆனா நாளிலிருந்து இதோ இன்று வரை, 30வருடமாக வேதாவின் பொழுது 4மணிக்கே ஆரம்பித்துவிடும். அரவிந்துக்கு கடவுள் பக்தி , பூசை இதில் எல்லாம் விருப்பமும், நம்பிக்கையும் அதிகம். விடிக்காலை எழுந்து, ஆபீஸ் போகும் முன்பு 2மணி நேரம் கடவுளிடம் உரையாடி விட்டுத்தான், செல்வான். வேதாவும் பிடிக்கிறதோ இல்லையோ கூடவே எழுந்து எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டும். கூடவே தேவையான சிற்றுண்டியும் தயார் செய்வாள். ஆனால், அரவிந்தோ,தன்னை நம்பி வந்த மனைவி இடம் குறைந்த பட்ச அன்பையோ மதிப்பையோ காட்டாத்தெரியாதவன். இவனுக்கு பூசை சாமி எல்லாம் எதற்கு என்று தோன்றுகிறது.
மனைவி என்பவள் தன் ஆளுமையல் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் வர்கத்தில் அரவிந்தனும் ஒருவன். வேதாவிற்கு என்று ஒரு விருப்பு,வெறுப்போ, பேச்சு சுதந்திரமோ கிடையாது. வேதாவிற்கு பாட்டில் மிகவும் ஈடுபாடு, நன்றாக பாடவும் செய்வாள். கச்சேரி போகும்,கேட்கும் பழக்கமுள்ள அரவிந்த் இது வரை அவளைப் பாடச் சொல்லிக் கேட்டதில்லை. "நீ பாடினால் கதவிடுக்கில் மாட்டிய எலிப் போல் இருக்கு, தயவு செய்து என் முன்னால் பாடதே",என்பான். ஆபீஸ், மற்றும் friends இவர்களிடம் எல்லாம் கலகல என்று பழகுபவன் மனைவியை மட்டும் ஒருஅடிமை போல் தான் நடத்துவான்.வேதாவிற்கு கைவேலை painting எல்லாம் ரொம்ப நன்றகத் தெரியும்.ஆனால்," நீ என்ன கண்காட்சியா வைக்கப் போகிறாய்?" என்பான்.
ஒருவரின் எந்த சொல்லோ, செயலோ, நமக்கு வருத்தமும், கஷ்டமும் தருகிறதோ, அதையே நாம் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது என்ற எண்ணம் கொண்டவள் வேதா. எல்லோரிடமும் ரொம்பவும் நட்புடன் அன்புடனும் பழகுபவள். உறவினற்கோ, நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ உதவி செய்வதிலும், உடல் நிலை சரி இல்லை என்று தெரிந்தால் அவர்களுக்கும் செவிலியரைப் போல் துணையாக இருப்பதிலும் முதல் ஆளாக இருப்பாள்.
ஆனால் கணவருடன் இதுவரை ஒரு ஆபீஸ் பார்ட்டியோ, நண்பர்கள் வீடோ போனதில்லை. இப்படி இருந்தும் வேதாவுக்கு கணவனிடத்தில் அன்பு இருக்க தான் செய்தது. இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உண்டு.மற்றவர்கள் அவரைக் குறை சொல்லக் கூடாது என்பதற்காகவே, தனக்கு குழந்தை பாக்கியத்தைக்கொடுத்தாரோ என்று வேதா நினைப்பதுண்டு. இன்று அவன் திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக இருக்கான். அப்பப்போ போனில் பேசுவதோடு சரி.அவனாவது மனைவியை நல்லபடியாக வைத்த்ருக்கானே என்று தோணும். வேதாவும் அவர்களை தொந்தரவு செய்யமாட்டாள்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இவளுக்கென பொறுப்பெல்லாம் முடிந்து,கவலை இல்லாத வாழ்க்கை என்று தான் தோன்றும்.ஆனால் வேதாவிற்கு தான் தெரியும்,ஒரு நாள் கூடதான், தனக்காக வாழ்வில்லை என்று.சாப்பாடு விஷயத்தில் கூட கணவனது விருப்பம் தான்.சரி, வீட்டில்தான் இப்படி என்றால், என்றேனும் அத்திப் பூத்தாற்போல் ஹோட்டல் சென்றால் அங்கும், அவளுக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்து விடுவான். இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்களுக்கு உள்ள மெனோபாஸ் கஷ்டத்திலும், அவனது தேவையையோ சௌகரியத்தியோக் குறைத்துக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில் கூட கணவனின் அன்பும்,அனுசரணையும் அவளுக்கு கிடைக்கவில்லை.
கூடப் பிறந்தவர்களும், பெற்றோரும் அரவிந்த் குணம் தெரிந்து கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்பார்கள். வேதாவிற்கு தன் கணவன் எப்படி இருந்தாலும், அனுசரித்து போவது தான் நல்லது என்று எண்ணுபவள்.இருந்தும்,மற்ற கணவன்,மனைவியைப் பார்க்கும் போது ஒரு ஏக்கம் வரத் தான் செய்யும்.மனதில் உள்ளதை எல்லாம் ஆதங்கத்துடன் தன் பள்ளித் தோழி தயாவுடன் தான் பகிர்ந்துக் கொள்வாள். அவளுடன் எப்போ பேசினாலும் கணவனிடம் தைரியமாக பேசச் சொல்வதுடன், மனதளவில் வேதாவிற்கு அதற்கு உண்டான பக்குவமும், தைரியமும் வரும்படியான முயற்ச்சியை செய்யத் தவறமாட்டாள்.தயாவிடம் பேசும் போது வரும் தைரியம், கணவனைக் காணும் போது, விளக்கைப் போட்டால் ஓடி மறையும் இருளைப் போல் வேதாவின் தைரியமும் ஓடி மறைந்து விடும்.
இன்று என்னவோ மனம் ரொம்ப சலிப்படைந்து விட்டதுப் போல் தோன்றியது.இன்னும் கொஞ்ச நாளில் அரவிந்த் ஓய்வு பெற்று விடுவார்.அப்பவும் இதே நிலை தொடரந்தால் தன் மன அழுத்தமே நோயில் தள்ளி விடுமோ என்று அஞ்சினாள். முன்பு மன பலம் இருந்ததோ,இல்லையோ உடல் பலம் இருந்ததால் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்தது.இப்போ மன,உடல் பலம் இரண்டுமே சோந்து விட்டது.அன்புக்கும் அனுசரணைக்கும் ஏங்கியது., இதைக் கணவனும் உணர வேண்டும்என்று விரும்பினாள் .வேதா இனியும் தாமதிக்காமல் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று உணர்ந்தாள்.
தன் உயிர்த் தோழி தயாவிடம் பலவிதமாக கலந்து ஆலோசித்து,என்ன,எப்படி செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்தாள். இப்போது மனம் ஒரு ஜான்சி ராணியாக உருவெடுக்கத் தொடங்கியது. இத்தனை வருட மண வாழ்க்கையில் அர்விந்திற்கு தன் மேல் ஒரு துளி அன்பேனும் இருக்கும் என்று நம்பி இந்த முடிவை எடுத்தாள்.நிதானமாக அரவிந்திற்கு, மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி ஒரு நீண்ட கடிதம் எழுதினாள். அதோடு அவனை விட்டு தான் தற்காலிகமாக பிரிந்து இருக்க விரும்புவதயும் தெரியப் படுத்தினாள்.இந்தப் பிரிவு அவனுக்குப் பலதையும் புரிய வைக்கும் என்று நம்பினாள். தான் இல்லாத போது தன் அன்பையும், அன்நோன்னியத்தையும் கணவன் உணர வேண்டும், என்று விரும்பினாள்.நம்பிக்கைத்தான் வாழ்க்கை;அரவிந்த் தன்னை தேடி வரும் நாள் வெகு தூரம் இல்லை ;மீண்டும் ஒரு புது வாழ்க்கையை அரவிந்துடன் தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
tamil short story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil short story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 10 ஜூலை, 2011
ஞாயிறு, 3 ஜூலை, 2011
மாய வேலை (வலை)
அனிதா திருமணம் முடிந்து துபாய் வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது . அன்பான கணவன் சுரேஷ், 18 மாத குழந்தை அருண் இவர்களுடன் வாழ்கை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அனிதா நாளை விடியலை மிகவும் ஆவலாய் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். என்றும் போல் அவளை இன்று உறக்கம் ஆட்கொள்ளவில்லை. நாளை எழுந்தவுடன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை . மனதிற்குள் அசைப்போட்டாள் .தான் எடுத்திருக்கும் முடிவால் கணவனுக்கும், குழந்தைக்கும் எந்த வித இடைஞ்சலும் வராமல் இருக்க ஆசைப் பட்டாள். எப்போது உறங்கினளோ ? தீடிரென்று 4 மணிக்கு அலாரம் அடிக்க உறகத்திலுருந்து விடுபட்ட அனிதா, அதன் தலையல் பட்டென்று அடித்தாள். அவசரமாக காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு கிச்சனில் நுழைந்தாள். இங்கு பால் காரனுக்கு காக்க வேண்டிய அவசியம் இல்லை. fridge லிருந்து பால் எடுத்து காபி குடித்தவுடன் மடமடவென்று சமையலை கவனிக்கத் தொடங்கினாள். சத்தத்தில் எழுந்த சுரேஷ், மனதிற்குள் சிரித்துக்கொண்டான். இவள் எப்படி சமாளிக்கப் போகிறாள் என்று கவலைப்பட்டான்.
சமையலை முடித்த அனிதா சுரேஷிடம் வர, மணி காலை 6 .30 ஆனது. ''இன்னுமா தூக்கம்? இன்று தான் முதல் நாள் ஆபீஸ் எனக்கு; நீ கிளம்புபோது என்னையும், அருணை babysiter இடமும் drop பண்ணனும் சரியா?' 'உன் பேசுக்கு மறு பேச்சு உண்டா? நீ எல்லாம் தயார் பண்ணு, நான் குளித்து விட்டு வருகிறேன் " என்றான். அனிதா அவனுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தூங்கும் குழந்தை இடம் வந்தாள். தூக்கத்திலே பாலைக் கொடுத்துவிட்டு ஈரமாக இருத்த டயபர் ஐ மாற்றி டிரஸ் யும் மாற்றினாள். இதற்குள் சுரேஷ் ரெடி ஆகிவிட்டான் ."சுரேஷ், உன்னுடைய பிரேக்.பாஸ்ட் ரெடி ,சாப்பிட்டுவிட்டு, அருண் க்கு வேண்டியதை அந்த பாக்ஸ் இல் பாக் பண்ணிவிடு ப்ளீஸ், நான் இதோ ரெடி ஆகி விடுகிறேன் " என்று ரூமுக்குள் புகுந்தாள். நேற்றே அயன் பண்ணி இருந்த காட்டன் புடவைக்கு மேட்ச் ஆக மற்ற இத்யாதிகளையும் அணிந்து வெளியே வரும் போது அருண் இன்னமும் சுரேஷ் தோளில் தூங்கிக் கொண்டிருந்தான். "அனிதா, இப்பிடியே கொண்டு விட்டால் எழுந்ததும் ரொம்பவும் அமக்களம் பண்ணுவானே " அதெல்லாம் போகப்போக சரியாகிவிடும் ,சுரேஷ் " என்றபடி சமைத்ததை ஹாட்.பாட் இல் வைத்துவிட்டு வர மணி 7.45 ஆகிவிட்டது . சுரேஷ் அவர்களை drop செய்துவிட்டு ஆபீஸ் வந்து சேர 8.30ஆகிவிட்டது .
இந்தியாவில் கல்யாணத்திற்கு முன்னால் ஒரு வருஷம் அம்மா எல்லாம் பார்த்துக் கொண்டதால் அனிதா வால் ஜாலியாக வேலைக்குப் போய்வர முடிந்தது. இங்கு வந்த புதிதில் பார்ட்டி, டின்னெர், அரட்டை என்று பொழுது போனது. அருணும் வந்து விட்டதால் பொழுது சரியாக இருந்தது. இருவருக்கும் அருண் மேல் ரொம்ப ஆசை. அருண் சரியான அம்மா செல்லம் .இந்த routine கொஞ்சம் போர் அடிக்க, அப்பப்போ எட்டிப்பார்க்கும், வேலைக்குப் போகும் ஆசை அனிதாவிற்கு இப்போ அதிகமானது. கணவன் எவ்ளவோ சொல்லிப் பார்த்தான் , "அனி, நீயே உன் friends பற்றி குறை சொல்வாய், வீட்டையும் குழந்தையும் விட்டு விட்டு அப்படி என்ன பொல்லாத வேலை என்று ", இல்லை ,சுரேஷ், I can manage " என்றாள். அதற்கு மேல் அவன் கட்டாயப்படுதவிலை . எப்படியோ இன்று அனிதா வேலைக்கு போகும் முதல் நாள்.
ஆபீஸ் போன அனிதாவிற்கு அருணைப் பற்றித்தான் சிந்தனை. எழுந்ததும் என்ன கலாட்டா பண்ணுகிறனோ, சுரேஷ் ஒழுங்காக breakfast வைத்தாரா என்று.உடனை சுரேஷ்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, அருணை மறக்காமல் 1 .30 மணிக்கு pick up செய்ய சொல்லி, "நானும் ஒண்ணரை மணிக்கு வந்துடுவேன் " என்றாள். "சரி அனி, நான் இப்போ ரொம்ப பிஸி , சும்மா தொந்தரவு பண்ணாதே" என்று போன் ஐ வைத்தான். "சீய் இந்த ஆம்பிளைகளே இப்படித்தான், என்னடா, இன்று wife க்கு முதல் நாள் ஆபீஸ் இல்லையா ? எப்படி இருக்கு , என்ன என்று ஒரு வார்த்தைக் கேட்டால் என்னவாம் ?" என்று நினைத்தாள்.
மதியம் லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்த போது, அருண் அவளைப் பார்த்து ஒரேடியாக அழுது கட்டிக்கொண்டது. அவனை சமாதானப் படுத்தி தூங்க வைத்து, சாப்பிட்டு எழுந்த போது மணி 3ஐ தொட்டது. அவசரமாக துணியை வாஷிங் மிசின்இல் போட்டுவிட்டு மீண்டும் ஆபீஸ் கிளம்ப தயாரானாள்.
இரண்டு, மூன்று நாள் போனதே தெரியவில்லை. பாவம் அருண்! புது சூழ் நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. அன்று ஆபீஸ் விட்டு வரும் போதே அருண் உடம்பு சரி இல்லாததைக் கவனித்தாள். காலையில் எழுந்தபோது நல்ல ஜுரம். அனிதாவால் லீவ் எடுக்க முடியாது. "சுரேஷ் இன்னிக்கு மட்டும் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்துக்கொள்ளேன்". என்றாள். சுரேஷ், "இன்று எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு;
வேண்டுமானால் மருந்து, மாத்திரை எல்லாம் பேபி சிட்டர் இடம் கொடுத்து விடுவோம்; சாயங்காலம் டாக்டர் இடம் போகலாம் ." என்றான். அன்று எதோ சமைத்து விட்டு அருண்ணை பேபி சிட்டர் இடம் விட்டு ஆபீஸ் சென்றாள். ஜுரம் சீக்கிரமே குறைந்தாலும் , அவன் சரியாக சாபிடாதது வருத்தமாக இருந்தது . இப்போதெல்லாம் குழந்தையுடன் விளையாடுவதற்கோ , கொஞ்சுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை , என்று அனிதா ரொம்பவும் வருத்தப்பட்டாள். அதுவே அவனுக்கு ஏக்கமாக கூட இருக்கும். இந்த மாதிரி பல சிந்தனை மனதில் ஓட சரியாக தூங்க கூட முடியவில்லை அனிதாவால்.
இரண்டு, மூன்று நாள் போனதே தெரியவில்லை. பாவம் அருண்! புது சூழ் நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. அன்று ஆபீஸ் விட்டு வரும் போதே அருண் உடம்பு சரி இல்லாததைக் கவனித்தாள். காலையில் எழுந்தபோது நல்ல ஜுரம். அனிதாவால் லீவ் எடுக்க முடியாது. "சுரேஷ் இன்னிக்கு மட்டும் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்துக்கொள்ளேன்". என்றாள். சுரேஷ், "இன்று எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு;
வேண்டுமானால் மருந்து, மாத்திரை எல்லாம் பேபி சிட்டர் இடம் கொடுத்து விடுவோம்; சாயங்காலம் டாக்டர் இடம் போகலாம் ." என்றான். அன்று எதோ சமைத்து விட்டு அருண்ணை பேபி சிட்டர் இடம் விட்டு ஆபீஸ் சென்றாள். ஜுரம் சீக்கிரமே குறைந்தாலும் , அவன் சரியாக சாபிடாதது வருத்தமாக இருந்தது . இப்போதெல்லாம் குழந்தையுடன் விளையாடுவதற்கோ , கொஞ்சுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை , என்று அனிதா ரொம்பவும் வருத்தப்பட்டாள். அதுவே அவனுக்கு ஏக்கமாக கூட இருக்கும். இந்த மாதிரி பல சிந்தனை மனதில் ஓட சரியாக தூங்க கூட முடியவில்லை அனிதாவால்.
அன்று வெள்ளிக்கிழமை வீட்டில் friends ஐ dinner க்கு invite பண்ணி இருந்தார்கள். காலையிலுருந்து வீட்டை ஒழுங்குப் படுத்தி பாத்ரூம் கிளீன் பண்ணி எல்லாவற்றயும் , சரிப்படுத்தி வைத்தாள். பிறகு டின்னெர் க்கு வேண்டியதை தயாரிக்க ரொம்பவும் திண்டாடிவிட்டாள் , "அனி, நான் cooking ல் ஹெல்ப் பண்ணட்டுமா ? " வேண்டாம் , நீ அருணை ப் பார்த்துக்கொள் , அதுவே பெரிசு" என்றாள். ஒரு மாதிரி எல்லா வேலையும் முடித்து விட்டு, அருணுக்கும் வேண்டியதை கவனித்து guest ஐ வரவேற்கத் தயாரானாள்.எல்லோரும் வந்த பின்பு kitchen இல் வேலை செய்வது , அனிதாக்கு பிடிக்காத விஷயம். எட்டு மணிக்கு ஒரு மாதிரி எல்லோரும் வந்து சேர்ந்தார்கள் . ஒருவரை ஒருவர் வாரிக்கொள்வதும், இல்லாத ஒருவரின் தலையை உருட்டுவதும் ஆக நேரம் போய்க்கொண்டு இருந்தது .
"என்ன ,அனிதா , வேலைக்கு போக ஆரம்பித்தப் பிறகு என்னன்ன புதுசா வாங்கினாய் ?' (ஆமாம் ,இன்னும் ஒரு மாச சம்பளமே வாங்கவில்லை ,அதற்குள்.) என்ன ரொம்ப பிஸி யா ,எதாவது உதவி வேணுமா ?" இப்படி வழக்கமான கேள்விகளில் ஆரம்பித்து topic எங்கையோ போயிற்று . அனிதா மணியைப் பார்த்தாள். "my god ! நாளைக்கு ஆபீஸ் இருக்கே ". அருண் இன்னமும் விளையாடிக் கொண்டிருந்தான் .எல்லா லேடீஸ் கும் பொறுமை போய் சாப்பிடலாமா என்றார்கள் . "இன்னுமா இவர்கள் ட்ரிங்க்ஸ் முடியவில்லை , விட்டாப் போரும், காணாததை, கண்ட மாதரி, ஓயமாட்டார்கள்" என்று சொல்ல அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் கூச்சலும் கும்மாளமும் ஆக டின்னெர் முடிந்தது.
எல்லோரும் போனப் பிறகு வீடு இருந்த நிலையைப் பார்த்து அனிதாவிற்கு பக்கென்றது . எல்லாம் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டது போட்டப்படி தூங்கப் போய்விட்டாள். காலயில் எழந்ததும் அனிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை; சுரேஷ்க்கும் ஒரே எரிச்சலாக இருந்தது ."என்ன அனி எப்படி சமாளிக்கப் போகிறோம் " இதற்குத்தான் ஹவுஸ் பாய்க்கு ஏற்பாடு பண்ணு என்று சொன்னேன் , நீ எங்கே கவனிச்ச!" ஹவுஸ் பாய் கிடைப்பது சுலபமில்லை என்று உனக்குத் தெரியாதா? ஓரளவு தான் என்னால் உதவி பண்ண முடியும் , என்னோடஆபீஸ் வேலை ரொம்பவும் பொறுப்பானது, தவிர டென்ஷன்னும் ஜாஸ்தி ; இதையல்லாம் யோசித்துதான் நான் ஆரம்பம்தில் இப்போ உனக்கு வேலை வேண்டாம் என்றேன் ". சரியான சமயம் பார்த்து பிடித்தான் ." ஆமாம் , உனக்கு எப்போவும் இஷ்டம் இல்லை அதான்".
"என்ன ,அனிதா , வேலைக்கு போக ஆரம்பித்தப் பிறகு என்னன்ன புதுசா வாங்கினாய் ?' (ஆமாம் ,இன்னும் ஒரு மாச சம்பளமே வாங்கவில்லை ,அதற்குள்.) என்ன ரொம்ப பிஸி யா ,எதாவது உதவி வேணுமா ?" இப்படி வழக்கமான கேள்விகளில் ஆரம்பித்து topic எங்கையோ போயிற்று . அனிதா மணியைப் பார்த்தாள். "my god ! நாளைக்கு ஆபீஸ் இருக்கே ". அருண் இன்னமும் விளையாடிக் கொண்டிருந்தான் .எல்லா லேடீஸ் கும் பொறுமை போய் சாப்பிடலாமா என்றார்கள் . "இன்னுமா இவர்கள் ட்ரிங்க்ஸ் முடியவில்லை , விட்டாப் போரும், காணாததை, கண்ட மாதரி, ஓயமாட்டார்கள்" என்று சொல்ல அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் கூச்சலும் கும்மாளமும் ஆக டின்னெர் முடிந்தது.
எல்லோரும் போனப் பிறகு வீடு இருந்த நிலையைப் பார்த்து அனிதாவிற்கு பக்கென்றது . எல்லாம் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டது போட்டப்படி தூங்கப் போய்விட்டாள். காலயில் எழந்ததும் அனிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை; சுரேஷ்க்கும் ஒரே எரிச்சலாக இருந்தது ."என்ன அனி எப்படி சமாளிக்கப் போகிறோம் " இதற்குத்தான் ஹவுஸ் பாய்க்கு ஏற்பாடு பண்ணு என்று சொன்னேன் , நீ எங்கே கவனிச்ச!" ஹவுஸ் பாய் கிடைப்பது சுலபமில்லை என்று உனக்குத் தெரியாதா? ஓரளவு தான் என்னால் உதவி பண்ண முடியும் , என்னோடஆபீஸ் வேலை ரொம்பவும் பொறுப்பானது, தவிர டென்ஷன்னும் ஜாஸ்தி ; இதையல்லாம் யோசித்துதான் நான் ஆரம்பம்தில் இப்போ உனக்கு வேலை வேண்டாம் என்றேன் ". சரியான சமயம் பார்த்து பிடித்தான் ." ஆமாம் , உனக்கு எப்போவும் இஷ்டம் இல்லை அதான்".
"இல்லை அனி, நீயும் வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து நிறைய விஷயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை . அருணின் routine ரொம்பவே மாறிவிட்டது. அவன் பேபி சிட்டர் இடமும் சந்தோஷமாக இல்லை .வீட்டில் நாம் தான் நிம்மதியாக சமைத்து சாப்பிட்டு இருப்போமா ?, பாதி நாள் வெளியில் தான்; அருணை தான் உன்னால் ஒழுங்காக கவனிக்க முடிந்ததா ? நீ இல்லாமல் அவன் எவ்வளவு தவிக்கிறான் தெரியுமா ?அவசியமில்லாமல் நீயாய் தேடிக்கொண்ட நிலைமை இது ,sorry to say this .எனக்கு ஆபீஸ்க்கு நேரமாகிறது, bye " என்று கிளம்பிவிட்டான்.
அனிதா முடித்த மட்டும் வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு. ஆபீஸ் கிளம்பினாள். மாலை வீடு வரும் போது ஒரு தீர்மானத்தோடு வந்தாள். அன்றிரவு சுரேஷ் அவளருகில் வந்து தோள் மேல் கை வைத்து ,"சாரி அனி காலையில் நான் அப்படிபேசி இருக்க கூடாது ; ஆனால் இந்த கொஞ்ச நாளில் உன்னையும் சரியாக கவனித்துக் கொள்வதில்லை . இப்படி எல்லோரையும் வருத்திக் கொண்டு , போலி கௌரவதிற்காக ,வேலைக்குப் போகும் அவசியம் நமக்கு இல்லை; இன்னும் 2 ,3 வருஷத்தில் அருண் கொஞ்சம் பெரியவனாகி விடுவான் , அப்போ இது பற்றி யோசிக்கலாம் . வீட்டிலையே உன்னை பிஸி ஆக வைத்துக் கொள்ள நிறைய வழி இருக்கு . இந்த வயதில் அவனுடன் அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய் ?".தான் மனதில் நினைத்ததை சுரேஷ் அப்படியே கூற ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்." என்ன அனி , கோவமா ?" "இல்லை சுரேஷ் , நான் தான் கொஞ்சம் அவசர பட்டு விட்டேன் . என் ஆசையை கொஞ்சம் தள்ளிப் போடுவதில் தப்பில்லை .இன்னும் ஒரு வாரம் தான், பாரேன் நான் பழைய அனிதாவாக மாறிடுவேன்." ."தட்ஸ் குட் " என்றான்.
இரண்டு பேரும் மனம் விட்டுப் பேசியதால் பிரச்சனை லேசாகியது. மயக்கும் மாய வேலைக்கு (வலை) விடுதலைக் கொடுக்க நிம்மதியாக உறங்கினார்கள் .
*************************************
லேபிள்கள்:
குட்டி கதை,
குடும்ப கதை,
சமுக கதை,
சிறு கதைகள்,
kathai,
short story,
tamil short story
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)