கூடா(ங்)த குளம் !!!
கூடாங்குளம் இன்று தமிழ் நாட்டில் எல்லோராலும் மெல்லப் படுகின்ற அவலாகி விட்டது. அங்குள்ள மக்கள் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிராக நடத்தி வரும் போராட்டம், மற்றவர்களை அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பதை மறுபதற்கில்லை. ஆனால் இது குறித்து சில கேள்விகள் பாழும் மனதில் எழத்தான் செய்கிறது.
1.இன்று இவ்வளவு தீவிரமாக எழுந்திருக்கும் போராட்டம் அடிக்கல் நாட்டும் போதே நடத்தி இருந்தால் கால விரயமும், பண விரயமும் தடுக்கப் பட்டிருக்கலாம்.
2. இத் திட்டத்தை பற்றிய சரியான விழிப்புணர்வும் தெளிந்த சிந்தனையும் அப்பகுதி மக்களை சென்றடைய வில்லையோ?
3.சில அரசியல்வாதிகளும், கட்சிகளும்தங்களின் சுய விளம்பரத்திற்காக அப்பாவி மக்களை தங்கள் கை பொம்மைகளாகப் பயன் படுத்துகின்றனரோ?
ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்தைக் கூற உரிமை உண்டு. அது போல் அரசாங்கமும் மக்கள் நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கி இருக்காது. மேலும் கல்பாக்கத்தை விட கூடுதல் பாதுகாப்புக் கொண்டு கூடாங்குளம் அமைத்திருப்பதை சம்மந்த பட்டவர்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை இதன் பலன், பாதுகாப்பு,மற்ற விவரங்கள் மக்களை சரியாகச் சென்றடைய வில்லையோ? எப்போது மக்களுக்கு தங்கள் வாழ்வு, பாதுகாப்பு பற்றிய பயம் இத் திடத்தினால் ஏற்படுகிறதோ அதை போக்குவது தான் சம்மந்த பட்டவர்களின் முதன்மையானக் கடமை ஆகும். இல்லையனில், மக்களின் அறியாமையை சாதகமாகக் கொண்டு சிலர் அரசியல் சாயம் பூசி முடக்க வாய்பு உண்டு.
இத் திட்டத்திற்காக பல ஆயிரம் கோடி செலவிடப் பட்டுள்ளது; எல்லாம் மக்கள் பணமே; இது கை விடப் பட்டால் பணம், நேரம் விரயமாவதுடன், இங்கு வேலை செய்ய எடுக்கப் பட்டவர்களின் நிலை என்னாகும் என்று தெரியவில்லை! வீணாக்கப் பட்ட எங்கள் பணத்திற்கு என்ன பதில் என்று ஒரு சாரர் போராட்டம் தொடங்கினால்? அதற்கும் இதே கட்சியும் அரசியல்வாதிகளும் துணைப் போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை. எந்த ஒரு திட்டத்தின் பலனும் மக்களிடம் சரிவர சென்றடைந்தால் தான் அமல் படுத்த முடியும்.எந்த வித குறுக்கீடும் இல்லாமல் மக்களிடம் நேரடியான பேச்சு வார்த்தை நடத்தி சரியானக் கோணத்தில் தெளிவு படுத்த வேண்டும். மக்களும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்;தங்களின் பலவீனக்களையும் அறியாமையையும் சாதகமாகக் கொண்டு பேசுபவர்களின் சொல்களையும்,செயல்களையும் கண்மூடித் தனமாக பின்பற்றுவதை விட்டொழிக்க வேண்டும்.
சுயமாக சிந்தித்து உண்மையிலே நல்லத் திட்டமாக இருந்தால் இழப்பீட்டையும்,சலுகைகளும் கூடுதலாக பெற வேண்டி போராடலாம். ஆனால் திட்டத்தேயே கைவிட வேண்டும் என்று அதுவும் செயல் படுத்தும் தருணம் முட்டுக் கட்டை போடுவது சரியாய் என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக